பஸ்களை இயக்க மறுத்து டிரைவர்–கண்டக்டர்கள் திடீர் போராட்டம்


பஸ்களை இயக்க மறுத்து டிரைவர்–கண்டக்டர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2017 10:15 PM GMT (Updated: 2017-02-08T02:56:59+05:30)

போக்குவரத்துக்கழக கிளை மேலாளரை கண்டித்து பஸ்களை இயக்க மறுத்து டிரைவர்–கண்டக்டர்கள் திடீர் போராட்டம்

அருப்புக்கோட்டை,

போக்குவரத்துக்கழககிளை மேலாளரை கண்டித்து டெப்போவில் இருந்து பஸ்களை வெளியே எடுக்காமல் டிரைவர்களும் கண்டக்டர்களும் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.

திடீர் போராட்டம்

அருப்புக்கோட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர், டிரைவர் மற்றும் கண்டக்டர்களை தரக்குறைவாக பேசுகிறார் என்றும் அவசர விடுப்பு தர மறுக்கிறார் என்றும் கூறி நேற்று டிரைவர்களும் கண்டக்டர் களும் நேற்று காலை திடீர் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த டெப்போவில் மொத்தம் 71 பஸ்கள் உள்ளன. இவற்றில் 56 பஸ்கள் தினமும் காலையில் டெப்போவில் இருந்து வெளியே கொண்டு வந்து இயக்கப்படும். ஆனால் நேற்று அதிகாலை டிரைவர்களும் கண்டக்டர்களும் டெப்போ முன்பு குவிந்தனர். பஸ்களை டெப்போவில் இருந்து வெளியே எடுக்க மறுத்து விட்டனர். டெப்போ முன்பு அமர்ந்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.

பாதிப்பு

டவுன் பஸ் மற்றும் புற நகர் பஸ்கள் எதுவும் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்தார்கள். இந்த நிலையில் விருதுநகர் மண்டல் போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் பாஸ்கரன் அருப்புக்கோட்டைக்கு விரைந்து வந்தார். அவரும் தாசிதால் சீதாலட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் ஆகியோரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் டிரைவர்களும் கண்டக்டர்களும் பணிக்குத்திரும்பினார்கள். அதிகாலை தொடங்கிய இந்த போராட்டம் 7 மணிக்கு முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் பஸ்கள் ஓடத்தொடங்கின.


Next Story