மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
x
தினத்தந்தி 7 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-08T02:56:58+05:30)

22 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்; 844 பேர் கைது

விருதுநகர்,

வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், மிளகாய் பயிருக்கு ரூ.20 ஆயிரமும், விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தினை 200 நாளாக உயர்த்த வேண்டும், குடிநீர் பிரச்சினையை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 22 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 212 பெண்கள் உள்பட 844 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகரில் மாநில குழு உறுப்பினர் தமிழ் செல்வன் தலைமையில் போராட்டம் நடந்தது.

ராஜபாளையத்தில் தென்காசி சாலையில் உள்ள தனியார் வங்கி அருகில் இருந்து முழக்கமிட்ட படி ஊர்வலமாக வந்து ஸ்டேட் வங்கி முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உட்பட 50 பேர் கைது செய்யப் பட்டனர். இதேபோன்று சேத்தூர், செட்டியார் பட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 150 பேர் கைது செய்யப் பட்டனர்


Next Story