மணல் கொள்ளையை தடுக்கக்கோரி வில்லியனூர் துணை கலெக்டர் அலுவலகம் முற்றுகை


மணல் கொள்ளையை தடுக்கக்கோரி வில்லியனூர் துணை கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 28 Feb 2017 10:30 PM GMT (Updated: 28 Feb 2017 11:20 PM GMT)

துணை கலெக்டர் மற்றும் போலீசாரை கண்டித்து வில்லியனூர் துணை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நேற்று காலை நடைபெற்றது.

வில்லியனூர்,

வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளை நடக்கிறது. இதை தடுக்காத துணை கலெக்டர் மற்றும் போலீசாரை கண்டித்து கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வில்லியனூர் துணை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நேற்று காலை நடைபெற்றது.

போராட்டத்துக்கு இயக்கத்தின் நிறுவன தலைவர் உளவாய்கால் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்க நிர்வாகி அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தை சேர்ந்த ஜெகநாதன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், பெரியார் தன்னறிவு இயக்கம் சடகோபன், தந்தை பெரியார் திராவிடர் கழக வீரமோகன், தமிழர்களம் அழகர், லோக் ஜன சக்தி புரட்சி வேந்தன், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன் மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.


Next Story