போலீஸ் நிலையம் முற்றுகை


போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 28 Feb 2017 10:30 PM GMT (Updated: 28 Feb 2017 11:24 PM GMT)

கம்பத்தில் போலீஸ் நிலையம் முற்றுகை

உத்தமபாளையம்,

ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கதமிழ்செல்வன். இவருடைய சொந்த ஊர் நாராயணத்தேவன்பட்டி ஆகும். இங்கு அவருக்கு சொந்தமான திராட்சை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலர் புகுந்து அங்குள்ள திராட்சை கொடியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தோட்டத்தின் காவலாளி சுப்பிரமணி என்பவர் ராயப்பன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 59), முருகேசன் (52), சங்கிலி (31) ஆகிய 3 பேரை நேற்று இரவு கைது செய்தனர். இதை கண்டித்து நாராயணத்தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story