அகமத்நகரில் ரூ.20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கொலை சக மாணவர்கள் உள்பட 4 பேர் கைது
அகமத்நகரில் ரூ.20 லட்சம் கேட்டு கல்லூரி மாணவரை கடத்தி கொன்ற சக மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
அகமத்நகரில் ரூ.20 லட்சம் கேட்டு கல்லூரி மாணவரை கடத்தி கொன்ற சக மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாணவர் மாயம்அகமத்நகர், தவுண்ட் தாலுகாவில் உள்ள ஸ்ரீகோந்தா பகுதியில் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தவர் அக்ஷய் பான்வகர் (வயது16). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை கல்லூரி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்ல. இது குறித்து அவரது பெற்றோர் ஸ்ரீகோந்தா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
பணம் கேட்டு மிரட்டல்இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் காணமல் போன மாணவரின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு பேசினர். அதில் ‘ நாங்கள் தான் உங்களது மகனை கடத்தியுள்ளோம். ரூ.20 லட்சம் தர வேண்டும். இல்லையெனில் உங்களது மகனை கொலை செய்து விடுவோம் ’ என மிரட்டினர்.
இதையடுத்து போலீசார் ஆய்வு செய்த போது அவரது கல்லூரி மாணவராக பி.டி.சோனானே என்பவரின் எண்ணில் இருந்து தான் அந்த அழைப்பு வந்தது தெரியவந்தது.
கொலைஇதையடுத்து போலீசார் பி.டி.சோனாவனேவை கைது செய்தனர். விசாரணையில், அவர் தன்னுடன் படிக்கும் மாணவர் மற்றும் 2 நண்பர்கள் உதவியுடன் அக்ஷய் பான்கவரை கடத்தி கொலை செய்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில், வாயரல்பாட்டா காட்டு பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வைக்கப்பட்டிருந்த அக்ஷய் பான்கவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய மற்ற 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.