நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 March 2017 4:15 AM IST (Updated: 1 March 2017 5:11 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ஆதார் அட்டை இணைக்காததை காரணம் காட்டி ஆயிரக்கணக்கான குடும்ப அட்டைதாரர்களுக்கு ரே‌ஷன் பொருட்கள் வழங்கப்படாததை கண்டித்தும், குடும்ப அட்டைகள் தரம் பிரிக்கப்படுவதை கண்டித்தும், அனைத்து ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் மாதந்தோறும் முறையாக பாமாயில், பருப்பு, உளுந்து, மண்எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கக் கோரியும், மாவட்டம் முழுவதும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் போர்க்கால அடிப்படையில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய கோரியும், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குமரி மாவட்டக்குழு சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அந்தோணி, மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லப்பன் நிறைவுரையாற்றினார். பின்னர் கோரிக்கை அடங்கிய மனு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.


Next Story