வங்கி ஊழியர்கள்– அதிகாரிகள் வேலைநிறுத்தம் குமரி மாவட்டத்தில் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவில்,
வேலை நிறுத்த போராட்டம்
வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்திருத்தம் கொண்டுவரக்கூடாது, மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுகட்ட வேண்டும், ரூ.13 லட்சம் கோடி வராக்கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடனை திரும்ப செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், கருணை அடிப்படையிலான வேலை நியமன திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் வங்கிகளின் வேலைநாட்களாக ஆக்க வேண்டும், அடுத்த சம்பள பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று ஒருநாள் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்கள் சார்பில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இதேபோல் குமரி மாவட்டம் முழுவதிலும் உள்ள 300–க்கும் மேற்பட்ட அனைத்து வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நாகர்கோவில் வடசேரி ஸ்டேட் வங்கி கிளை அருகில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் தலைமை தாங்கி பேசினார். இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அகமது உசேன் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வனிதா, விஷ்ணு, ஷெபின் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் அய்யாகுட்டி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மூடிகிடந்தன
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பெரும்பாலான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மூடிக்கிடந்தன. சில வங்கிகளின் முன் இன்று விடுமுறை என்ற அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டு இருந்தது. கூட்டுறவு வங்கிகள் சிலவற்றில் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வங்கிகளில் நேற்று பண பரிவர்த்தனை நடைபெறவில்லை. காசோலைகள் பரிமாற்றமும் நடைபெறவில்லை. வங்கிகளில் கொடுக்கப்பட்டிருந்த காசோலைகள் அந்தந்த வங்கிகளில் தேங்கிக்கிடந்தன.
மாதக்கடைசியான நேற்று அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சம்பள பணம் பெற முடியாத நிலைஏற்பட்டது. பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வங்கிகளில் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
வங்கிகள் வேலை நிறுத்தத்தால் பல ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் இருந்தது. இதனால் ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே பொதுமக்களும், வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்களும் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
ரூ.200 கோடி பாதிப்பு
இதுதொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அகமது உசேன் கூறியதாவது:–
நாடு முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் மொத்தம் 320 வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதில் 2 ஆயிரம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால், குமரி மாவட்டத்தில் ரூ.200 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அகமது உசேன் கூறினார்.

Next Story