கிருஷ்ணகிரி அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


கிருஷ்ணகிரி அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-02T19:14:25+05:30)

கிருஷ்ணகிரி பழையபேட்டை குப்பம் ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் மகா சிவராத்திரி திருவிழா

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பழையபேட்டை குப்பம் ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் மகா சிவராத்திரி திருவிழா மற்றும் மயான சூறைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி மகா சிவராத்திரி சக்தி கரகம், அக்னி கரகம், சக்தி பிறப்பு நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து சூலம் போடுதல், அம்பி அம்பா அம்பாலிகை நாடகம், வன்னிய புராண நாடகம், தீ மிதி விழா ஆகியவை நடைபெற்றது.

விழாவின் 6–ம் நாளான நேற்று முன்தினம் காலை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து மாலை அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இரவு சொர்க்கவாசல் நாடகம் நடந்தது. நேற்று கும்ப பூஜை, அன்னதானம் வழங்குதல், கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story