விருத்தாசலம் பகுதியில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க வேண்டும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு


விருத்தாசலம் பகுதியில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க வேண்டும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 2 March 2017 10:45 PM GMT (Updated: 2 March 2017 2:01 PM GMT)

விருத்தாசலம் பகுதியில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மாட்டு வண்டி மணல் குவாரிகள் விருத்தாசலம் பகுதியில் மணிமுக்தாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகள் செல்கின்றன. இந்த ஆறுகளில் அர

விருத்தாசலம்,

மாட்டு வண்டி மணல் குவாரிகள்

விருத்தாசலம் பகுதியில் மணிமுக்தாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகள் செல்கின்றன. இந்த ஆறுகளில் அரசு மாட்டு வண்டி மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் குவாரிகள் இயங்க திடீரென அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அரசக்குழி, ஊத்தாங்கால், கூனங்குறிச்சி, பொன்னாலகரம் உள்ளிட்ட என்.எல்.சி.யால் பாதிக்கப்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் இதுகுறித்து முறையிடுவதற்காக நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரனிடம், அரசு மாட்டு வண்டி மணல் குவாரிகளை மூடிவிட்டதால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

நடவடிக்கை

எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. இதனால் எங்கள் குடும்பமும், மாடுகளும் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாடுகளுக்கு தீவனம் வாங்க கூட எங்களிடம் பணமில்லை. அதனால் எங்கள் வாழ்வாதாரத்தை காக்க மீண்டும் மாட்டு வண்டி மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். அதற்கு ரவிச்சந்திரன், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


Next Story