தலைவாசல் அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்


தலைவாசல் அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்
x
தினத்தந்தி 2 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-02T22:46:55+05:30)

தலைவாசல் அருகே ஆறகளூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

தலைவாசல்,

தேரோட்டம்

தலைவாசல் அருகே ஆறகளூர் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 25–ந் தேதி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மயான கொள்ளை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் தேரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் எழுந்தருளியதும் தேரோட்டம் தொடங்கியது.

பக்தர்கள் பரவசம்

இந்த நிகழ்ச்சியில் ஆத்தூர், தலைவாசல், பெரியேரி, வீரகனூர், தெடாவூர், சின்னசேலம், ராயப்பனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். அம்மன் திருத்தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது.

விழாவையொட்டி இரவில் காமநாதீஸ்வரர் கோவில் முன்பு உள்ள மைதானத்தில் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி மற்றும் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) மகாலட்சுமி தேவி தாமரை அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆறகளூர் பருவதராஜகுல சமுதாய மக்கள் செய்துள்ளனர்.


Next Story