ராஜாஜி டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மைய மாணவர் குரூப்–4 தேர்வில் மாநில அளவில் 2–ம் இடம் பிடித்து சாதனை
நாமக்கல்லில் உள்ள மோகனூர் சாலையில் கந்தசாமி கண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக ராஜாஜி டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
நாமக்கல்,
நாமக்கல்லில் உள்ள மோகனூர் சாலையில் கந்தசாமி கண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக ராஜாஜி டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற குரூப்–4 தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் இந்த பயிற்சி மையத்தில் படித்த ஆத்தூரை சேர்ந்த மாணவர் மணிகண்டன் மாநில அளவில் 2–ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
மேலும் இப்பயிற்சி மைய மாணவர்கள் குரூப்–4 தேர்வில் தரவரிசையில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று உள்ளனர் எனவும், இந்த பயிற்சி மையத்தில் படித்து கடந்த 2005–ம் ஆண்டு முதல் இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு வேலையை பெற்று இருப்பதாகவும் இப்பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கலைவாணி ராசப்பன் தெரிவித்தார். மேலும் அவர் மாநில அளவில் 2–ம் பிடித்த மாணவருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.