சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 1,234 டன் யூரியா, காம்ப்ளக்ஸ் உரம் தஞ்சை வந்தது


சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 1,234 டன் யூரியா, காம்ப்ளக்ஸ் உரம் தஞ்சை வந்தது
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 3 March 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 1,234 டன் யூரியா, காம்ப்ளக்ஸ் உரம் தஞ்சை வந்தது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற் களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக குறுவை, சம்பா, தாளடி சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.

ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமும், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

1,234 டன் உரம்

மேலும் அவ்வப்போது உரம் வர வழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி நேற்று சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் 1,111 டன் யூரியா உரம், 123 டன் காம்ப்ளக்ஸ் உரம் என மொத்தம் 1,234 டன் உரம் தஞ்சை வந்தது.

இந்த உரங்கள் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும், தனியார் சேமிப்பு கிடங்கிற்கும் அனுப்பி வைக்கப்பட்டன. 

Next Story