சீமை கருவேல மரங்களை ஒழிக்க வலியுறுத்தி மாணவர்கள் மனித சங்கிலி

சீமை கருவேல மரங்களை ஒழிக்க வலியுறுத்தி மாணவர்கள் மனித சங்கிலி
x
தினத்தந்தி 2 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-03T02:55:48+05:30)

சீமை கருவேல மரங்களை ஒழிக்க வலியுறுத்தி மாணவர்கள் மனித சங்கிலி

விளாத்திகுளம்,

சீமை கருவேல மரங்களை ஒழிக்க வலியுறுத்தி, விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு நேற்று காலையில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் சாலையோரம் அணிவகுத்து கைகோர்த்து நின்றனர். தாசில்தார் ஈசுவரநாதன், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி முதல்வர் துரைராஜ், வக்கீல் சாமி, துணை தாசில்தார் சரவணபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் இருந்து பஸ் நிலையம் வரையிலும் மாணவ, மாணவிகள் ஊர்வலமாக வந்தனர்.

Next Story