பொதுமக்களின் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உறுதி


பொதுமக்களின் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உறுதி
x
தினத்தந்தி 3 March 2017 10:45 PM GMT (Updated: 3 March 2017 1:22 PM GMT)

தமிழகத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதிக்குள் எதிர்ப்பு இருப்பது போன்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

சிவகாசி,

தமிழகத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதிக்குள் எதிர்ப்பு இருப்பது போன்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த பொய்யான பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது தொகுதிக்கு சென்று தொகுதி மக்களை சந்திக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. தலைமை வலியுறுத்தியது. அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 தொகுதிகளுக்கும் சென்று பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனு வாங்கினார். தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்நிலையில் சிவகாசி சட்டமன்ற அலுவலகத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனு வாங்கினார். ஆனையூர், ரிசர்வ்லைன், இந்திராநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தனர். பொதுமக்களின் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி மக்களிடம் அமைச்சர் உறுதியளித்தார். அப்போது சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், திருத்தங்கல் ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் ரமணா, சிவகாசி எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய செயலாளர் லயன் கருப்பு, கருத்தப்பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story