பாலாறு – பொருந்தலாறு அணையில் பழுதான ‌ஷட்டர் அகற்றம்: மீன்கள் செத்து மிதந்தன


பாலாறு – பொருந்தலாறு அணையில் பழுதான ‌ஷட்டர் அகற்றம்: மீன்கள் செத்து மிதந்தன
x
தினத்தந்தி 3 March 2017 9:45 PM GMT (Updated: 3 March 2017 7:32 PM GMT)

பாலாறு – பொருந்தலாறு அணையில் பழுதான ‌ஷட்டர் அகற்றம்: தண்ணீர் வெளியேறியதால் மீன்கள் செத்து மிதந்தன

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாலாறு – பொருந்தலாறு அணை உள்ளது. இந்த அணையில் குடிநீருக்காக குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது. மேலும் அணையில் தேக்கி வைக்கப்பட்டு இருந்த தண்ணீரில் மீன்கள் விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பொருந்தலாறு அணைப்பகுதியில் ‌ஷட்டர் பழுதடைந்தது. இதைத் தொடர்ந்து அதனை சரி செய்வதற்காக ‌ஷட்டர் நேற்று அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேறியது.

அப்போது அணையில் விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வந்த மீன்களும் தண்ணீருடன் சேர்ந்து வெளியேறின. அவை சேற்றில் சிக்கி இறந்தன. செத்த மீன்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை. அணையில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேறியதால், பழனி நகருக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Next Story