ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்


ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 3 March 2017 9:30 PM GMT (Updated: 2017-03-04T02:29:03+05:30)

ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் நள்ளிரவு தொடங்கினர்

ஆரல்வாய்மொழி,

தமிழகத்தில் இயங்கி வரும் 5 கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து பேசி ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற 2 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரல்வாய்மொழியில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., பி.எம்.எஸ். ஆகிய 4 தொழிற்சங்கங்களும் ஈடுபட்டு உள்ளன.


Next Story