மும்பை மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு


மும்பை மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 March 2017 9:57 PM GMT (Updated: 2017-03-04T03:27:12+05:30)

மும்பை மாநகராட்சிக்கு நடக்கும் மேயர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வித்தல் லோஹரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

மும்பை மாநகராட்சிக்கு நடக்கும் மேயர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வித்தல் லோஹரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

31 வார்டுகளில் வெற்றி

மும்பை மாநகராட்சி தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, மேயர் பதவியை கைப்பற்ற சிவசேனா, பா.ஜனதா இடையே அதிகார போட்டி ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 31 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியும் மேயர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தது.

இதுகுறித்து அந்த கட்சியின் மும்பை தலைவர் சஞ்சய் நிருபம் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேண்டுகோள்

மும்பை மாநகராட்சி தேர்தலில் எங்களது கட்சி சார்பில் மேயர் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு சமாஜ்வாடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களிடம் முறையிட்டுள்ளோம். மேலும் சிவசேனா, பா.ஜனதா கட்சிகளை ஆதரிக்க வேண்டாம் என்றும் அவர்களை கேட்டுக் கொண்டு உள்ளோம். அவர்கள் கட்சி தலைமையிடம் இதுகுறித்து பேசி முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்பாளர் அறிவிப்பு

இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி தங்களது மேயர் வேட்பாளராக முகுந்த்- சிவாஜிநகர் பகுதியில் வெற்றி பெற்ற வித்தல் லோஹரே என்பவரை அறிவித்தது. இதனை மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தெரிவித்தார்.

Next Story