வேங்கிக்கால் தீபம் நகர் அருகே பழுதடைந்த உயர் கோபுர மின்விளக்கு சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை


வேங்கிக்கால் தீபம் நகர் அருகே பழுதடைந்த உயர் கோபுர மின்விளக்கு சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-10T19:15:33+05:30)

திருவண்ணாமலை வேங்கிக்கால் புதிய புறவழி சாலையில் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை உள்ளது.

கலசபாக்கம்,

திருவண்ணாமலை வேங்கிக்கால் புதிய புறவழி சாலையில் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. மருத்துவமனைக்கு திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மருத்துவமனைக்கு செல்ல நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலை – வேலூர் மெயின் சாலை வேங்கிக்கால் தீபம் நகர் பகுதியில் இருந்து பிரியும் புறவழி சாலையில் இறங்கி, அங்கிருந்து மாற்று பஸ்சில் செல்கின்றனர்.

இதன் காரணமாக இரவு நேரத்திலும் பொதுமக்கள், நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக தீபம் நகர் பஸ் நிறுத்தம் அருகே உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்கோபுர மின் விளக்கில் பழுது ஏற்பட்டது.

இதனையடுத்து உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் இரவு பணி முடித்துவிட்டு இந்த வழியாக வரும் பெண் பணியாளர்கள் மிகவும் அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பணியாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story