அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்வதை தடுக்க கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்வதை தடுக்க கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 10 March 2017 10:45 PM GMT (Updated: 10 March 2017 6:46 PM GMT)

அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் உறிஞ்சி சாயப்பட்டறைகளுக்கு விற்பனை செய்வதை தடுக்கவேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள வில்லரசம்பட்டி ஒண்டிக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்த 30–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈரோடு சம்பத் நகரில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் எஸ்.பிரபாகரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

ஈரோடு மாநகராட்சி 31–வது வார்டுக்கு உட்பட்ட ஒண்டிக்காரன்பாளையம் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஒருசிலர் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, எந்தவித அனுமதியும் பெறாமல் சாயப்பட்டறைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

சாயப்பட்டறைகளுக்கு விற்பனை

மேலும் இதேபோன்று சுற்றுவட்டார பகுதிகளான பெரிய தோட்டம், முருங்ககாட்டு தோட்டம் போன்ற பகுதிகளிலும் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அதில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, அனுமதியின்றி சாயப்பட்டறைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

இதன் காரணமாக பல ஆண்டுகளாக குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்த திறந்தவெளி மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் முற்றிலும் வற்றிவிட்டது. அதனால் குடிக்க நீரின்றி நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சி சாயப்பட்டறைகளுக்கு விற்பனை செய்வதை தடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.


Next Story