லாரிகளில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட ரூ.80 லட்சம் போதைப்பாக்கு பறிமுதல்


லாரிகளில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட ரூ.80 லட்சம் போதைப்பாக்கு பறிமுதல்
x
தினத்தந்தி 10 March 2017 11:05 PM GMT (Updated: 10 March 2017 11:04 PM GMT)

லாரிகளில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட ரூ.80 லட்சம் போதைப்பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைதாகினர்.

தானே

லாரிகளில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட ரூ.80 லட்சம் போதைப்பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைதாகினர்.

ரகசிய தகவல்

நாசிக்கில் இருந்து அதிகளவில் போதைப்பாக்கு கடத்தி வரப்படுவதாக தானே குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தானே காரேகாவ் சுங்கச்சாவடியில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த 2 லாரிகளை வழிமறித்து அந்த லாரியை திறந்து சோதனை செய்தனர்.

ஆனால் அந்த லாரிகளில் எதுவும் இல்லை. இருப்பினும் சந்தேகத்தின் பேரில் போலீசார் லாரியில் ஏறி சோதனை செய்தனர். அப்போது லாரியில் ரகசிய அறை இருந்ததை கண்டுபிடித்தனர்.

ரூ.80 லட்சம் போதைப்பாக்கு

அந்த அறையை திறந்து பார்த்த போது அதில் மூட்டை, மூட்டையாக போதைப்பாக்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இரண்டு லாரிகளிலும் இருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள போதைப்பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இரண்டு லாரி டிரைவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் வசாய் பகுதியை சேர்ந்த முகமது அஹிம் (வயது 24), புரேகான் சராபத் (35), நஸ்ரூல் கான் (26), கலீம் கான்(19) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இரண்டு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு தானே கமி‌ஷனர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. கைதானவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி உணவு மற்றும் மருந்துதுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


Next Story