உலகின் மிகப்பெரிய சூரியசக்தி மின் நிலையம்


உலகின் மிகப்பெரிய சூரியசக்தி மின் நிலையம்
x
தினத்தந்தி 11 March 2017 8:08 AM GMT (Updated: 11 March 2017 8:07 AM GMT)

சுமார் 10 சதுர மைல்கள் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இம்மின் நிலையம், 40 லட்சம் சோலார் பேனல்களை கொண்டுள்ளது.

க்கள்தொகை அதிகரிப்பு, தொழிற்சாலைகள் பெருக்கம் போன்ற காரணங்களால் பூமியில் இயற்கை எரிபொருள் வளம் வேகமாகத் தீர்ந்து வருகிறது.

இது ஒருபுறம் என்றால், இந்த மரபுசார்ந்த எரிபொருட்களால் சுற்றுச்சூழலும் மோசமாகப் பாதிக்கப்படுகிறது.

இதையெல்லாம் கருத்தில்கொண்டு, உலகின் பல நாடுகள் சூரிய சக்தி போன்ற மரபுசாரா மின்னுற்பத்தி முறைகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

அந்த வகையில், சீனாவில் உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 சதுர மைல்கள் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இம்மின் நிலையம், 40 லட்சம் சோலார் பேனல்களை கொண்டுள்ளது.

இதன் மூலம் 850 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த மின்சாரத்தால் 1.40 லட்சம் வீடுகள் பயன்பெற்று வருகின்றன.

கடந்த 2013–ம் ஆண்டு தொடங்கப்பட்ட இம்மின் நிலையம், படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 103 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சூரியசக்தி மின் நிலையம் 2013–ம் ஆண்டும், 2017–ம் ஆண்டும் விண்வெளியிலிருந்து பார்க்கும்போது காட்சி தரும் தோற்றங்களை ‘நாசா’ தற்போது வெளியிட்டிருக்கிறது.

Next Story