திருவேங்கடம் அருகே 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

திருவேங்கடம் அருகே உள்ள மைப்பாறை மேலத்தெருவைச் சேர்ந்த ரவி என்ற ரவிச்சந்திரன் (வயது 42). இவர் கடந்த 2010–ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
திருவேங்கடம்,
திருவேங்கடம் அருகே உள்ள மைப்பாறை மேலத்தெருவைச் சேர்ந்த ரவி என்ற ரவிச்சந்திரன் (வயது 42). இவர் கடந்த 2010–ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
இதில் 13 பேர் பல்வேறு கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர். முக்கிய குற்றவாளிகளாக மைப்பாறையைச் சேர்ந்த கண்ணன் (43), புஷ்பராஜ் (36) ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். கடந்த 6–ந் தேதி ஊருக்கு வந்த கண்ணனை போலீசார் கைது செய்து, சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
இந்த நிலையில் கடந்த 10–ந் தேதி திருவேங்கடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குறிஞ்சாக்குளம் பகுதியில் நின்று கொண்டு இருந்த புஷ்பராஜ் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், புஷ்பராஜ் கடந்த 7 ஆண்டுகளாக கோவையில் தலைமறைவாக தங்கி இருந்துள்ளார். ஊருக்கு வந்த இடத்தில் புஷ்பராஜ் போலீசில் பிடிபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இதனால் இந்த கொலையில் தொடர்புடைய 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story