ரூ.3 கோடி மோசடி புகார்: நத்தம் விஸ்வநாதன் முன்ஜாமீன் கேட்டு மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


ரூ.3 கோடி மோசடி புகார்: நத்தம் விஸ்வநாதன் முன்ஜாமீன் கேட்டு மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 11 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-11T22:23:33+05:30)

திண்டுக்கல் மாவட்டம் என்.பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்தவர் சபாபதி.

மதுரை,

திண்டுக்கல் மாவட்டம் என்.பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்தவர் சபாபதி. திண்டுக்கல் ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளராக உள்ளார். இவரிடம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ரூ.3 கோடி கடன் வாங்கி இருந்ததாகவும், அந்த தொகையை இதுவரை திருப்பி கொடுக்கவில்லை என்றும் போலீசில் புகார் அளித்தார். மேலும் இந்த புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, இதுகுறித்து பதில் அளிக்க திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில் இதுதொடர்பாக போலீசார் தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று நத்தம் விஸ்வநாதன் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story