சொத்துவரி செலுத்தாததால் 10 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு கடலூர் நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை


சொத்துவரி செலுத்தாததால் 10 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு கடலூர் நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 March 2017 4:15 AM IST (Updated: 11 March 2017 10:41 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் வில்வநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 10 பேர் நகராட்சிக்கு

கடலூர்,

கடலூர் வில்வநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 10 பேர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர். அவர்களுக்கு நோட்டீசு அனுப்பியும் அவர்கள் சொத்துவரியை செலுத்த முன்வரவில்லை. இந்நிலையில் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாத 10 வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பை துண்டிக்க நகராட்சி ஆணையாளர் விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்படி நேற்று நகர்நல அலுவலர் குமரகுருபரன் தலைமையில் வருவாய் அலுவலர் முத்துசெல்வம், வருவாய் ஆய்வாளர்கள் சீனுவாசன், ரமேஷ், கணேசன், ஜெய்சங்கர் மற்றும் வருவாய் உதவியாளர்கள் கொண்டு குழுவினர் சம்பந்தப்பட்ட 10 வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர்.

1 More update

Next Story