பவானி ஆற்றில் அணை கட்டும் கேரள அரசை கண்டித்து 14–ந் தேதி ஆர்ப்பாட்டம்


பவானி ஆற்றில் அணை கட்டும் கேரள அரசை கண்டித்து 14–ந் தேதி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 March 2017 4:15 AM IST (Updated: 12 March 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

பவானி ஆற்றில் அணை கட்டும் கேரள அரசை கண்டித்து 14–ந் தேதி ஆர்ப்பாட்டம் த.மா.கா. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

கோவை.

கோவை மாநகர் தெற்கு, வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆடீஸ் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்டத்தலைவர்கள் வி.வி.வாசன்(தெற்கு), கே.என்.ஜவஹர்(வடக்கு) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநில துணை தலைவர் கோவை தங்கம் முன்னிலை வகித்து பேசினார்.

‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவினாசி–அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பவானி ஆற்றில் கேரளா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 14–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மேலிட பார்வையாளர் சேலம் கந்தசாமி, குனியமுத்தூர் ஆறுமுகம், சி.பி.அருண்பிரகாஷ், சரத்விக்னேஷ், விஷ்ணு பிரசாத், ராஜ்குமார், கார்த்திக் கண்ணன், ராம்நகர் சக்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story