நன்னிலத்தில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்


நன்னிலத்தில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 11 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-12T02:48:11+05:30)

நன்னிலத்தில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் தி.மு.க. இலக்கிய அணி சார்பில் நடந்தது

நன்னிலம்,

நன்னிலம் பஸ் நிலையம் அருகில் திருவாரூர் மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். நன்னிலம் ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த் (வடக்கு), மனோகரன் (தெற்கு), முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பேச்சாளர் வெங்கடேசன், ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் இலக்கிய அணி புரவலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் செல்லையன், வலங்கைமான் ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன் (மேற்கு), தெட்சிணாமூர்த்தி (கிழக்கு), குடவாசல் ஒன்றிய செயலாளர்கள் ஜோதிராமன் (வடக்கு), பிரபாகரன் (தெற்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். முடிவில் துணை அமைப்பாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.


Next Story