விவசாயியை தாக்கிய வாலிபர் கைது


விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 March 2017 9:19 PM GMT (Updated: 2017-03-12T02:49:41+05:30)

விவசாயியை தாக்கிய வாலிபர் கைது

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமம் சன்னதி தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் பாலாஜி. இவர்கள் இருவருக்கும் அதே பகுதியில் அருகருகே வயல் உள்ளது. இந்நிலையில் பாலாஜி தனது வயலில் நெல் அறுவடை செய்ய நெல் அறுக்கும் எந்திரத்தை அனுப்பியுள்ளார். அப்போது அங்கு வந்த சிவக்குமார் தான் வயலில் உளுந்து விதைத்துள்ளேன். இதனால் இவ்வழியே நெல் அறுக்கும் எந்திரத்தை போக கூடாதென்று தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி (31), அவரது தந்தை தட்சிணாமூர்த்தி (55), அண்ணன் பாலமுருகன்(35) ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவக்குமார் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிவக்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சிவக்குமார் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான பாலாஜி, தட்சிணாமூர்த்தி ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story