அரியபாக்கம், ஆற்காடு குப்பத்தில் அம்மா திட்ட முகாம்


அரியபாக்கம், ஆற்காடு குப்பத்தில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 11 March 2017 11:00 PM GMT (Updated: 11 March 2017 9:21 PM GMT)

அரியபாக்கம், ஆற்காடு குப்பத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

ஊத்துக்கோட்டை,

அம்மா திட்ட முகாம்

ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியபாக்கத்தில் தமிழக அரசின் சார்பில் அம்மா திட்ட முகாம் நடந்தது. முகாமுக்கு துணை தாசில்தார் கதிர்வேல் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன், கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட 43 பேரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமணன், அரியத்தூர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பாலசுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆற்காடு குப்பம்

திருத்தணியை அடுத்த ஆற்காடு குப்பத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனை பட்டா போன்றவற்றை வழங்கவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். இதில் மொத்தம் 64 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் தகுதி உள்ள 33 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது..

இந்த முகாமில் திருத்தணி தாசில்தார் பரணீதரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான சான்றிதழ்களை் வழங்கினார்். முகாமில் பாலாஜி, வருவாய் ஆய்வாளர்கஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அருங்கால் கிராமம்

வண்டலூரை அடுத்த அருங்கால் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு கீரப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் பாலச்சந்தர், செங்கல்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தாசில்தார் இப்ராகிம், செங்கல்பட்டு சமூக நலத்துறை தனி தாசில்தார் பாக்கியலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.
முகாமில் ஒரு சில மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் வருவாய்த்துறையை சேர்ந்த பவளவண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் பசுபதி, ராஜ்குமார் மற்றும் அருங்கால் எத்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காக்களூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா காக்களூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பள்ளிப்பட்டு வட்ட துணை தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் வெண்ணிலா முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. முகாம் இறுதியில் திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம். நரசிம்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த முகாமில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.டி. சீனிவாசன், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சாந்திபிரியா சுரேஷ், முதுநிலை வருவாய் ஆய்வாளர் அற்புதராஜ், வருவாய் ஆய்வாளர் அஜய்பாபு, கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வி வனிதா, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story