கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும் பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும்
பரங்கிப்பேட்டை,
சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பா.ம.க தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமை தாங்கினார். மாநில வன்னியர் சங்க துணை தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயசஞ்சிவி, அருள், மாநில துணை தலைவர் சந்திரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர செயலாளர் கலியபெருமாள் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொது செயலாளர் அசோக்குமார் கலந்து கொண்டு பேசினார்.
தடுப்பணைகூட்டத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க வேண்டும், மேலும் கொள்ளிடம் ஆற்றில் தேவையான இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும், சிதம்பரம் நகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்வதோடு, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களை இடமாறுதல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தொழிற்சங்க தலைவர் வீரமணி, பேராசிரியர் திருநாவுக்கரசு, துணை தலைவர் அசோக், மாவட்ட செய்தி தொடர்பாளர் செல்வபிரதீஷ், நகர தலைவர் தர்மராஜ் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.