ஓசூரில், வெவ்வேறு இடங்களில் 2 கூலித்தொழிலாளிகள் தூக்குப்போட்டு தற்கொலை


ஓசூரில், வெவ்வேறு இடங்களில் 2 கூலித்தொழிலாளிகள் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-01T19:04:12+05:30)

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் 2 கூலித்தொழிலாளிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஓசூர்,

ஓசூர் சின்னஎலசகிரி பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் மதனகிரி (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (34). மதனகிரிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் மதனகிரி ரூ.5 ஆயிரம் தனது மனைவியிடம் கேட்டார். அப்போது அவர் தர மறுத்தார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த மதனகிரி நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

ஓசூர் கர்னூரைச் சேர்ந்தவர் முனி லட்சுமணன் (55). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவருக்கும், இவரது மனைவி சாந்தம்மாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முனி லட்சுமணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மனைவி சாந்தம்மா மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story