மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி தொழில் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மீனவர்கள்


மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி தொழில் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மீனவர்கள்
x
தினத்தந்தி 2 April 2017 4:15 AM IST (Updated: 1 April 2017 9:03 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி தொழில் இல்லாமல் மீனவர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொளத்தூர்,

மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதிகளில் மீன்பிடிப்பதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உரிமம் பெற்று உள்ளனர். நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வரலாறு காணாத வகையில் வறண்டு போனது. இதனால் மேட்டூர் அணையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மீனவர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

மீன்பிடி தொழில் இல்லாததால் மீனவர்கள் மாற்று வேலை தேடி கூலிவேலைக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். நடப்பாண்டில் மீன்பிடி தொழிலுக்காக கடன்வாங்கி புதிய வலைகளையும், பரிசல்களையும் வாங்கிய மீனவர்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் திண்டாடி வருகிறார்கள்.

குடிநீர் தட்டுப்பாடு

காவிரி ஆறு வறண்டதால் கரையோர கிராமங்களான கோட்டையூர், செட்டிப்பட்டி, பண்ணவாடி, சேத்துக்குளி போன்ற பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாய கிணறுகள் மட்டுமின்றி ஆழ்துளை கிணறுகளும் தண்ணீர் இன்றி வற்றி விட்டன. இதனால் இந்த பகுதி மக்கள் டிராக்டரில் வினியோகிக்கப்படும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.


Next Story