வறட்சிகாலத்தில் குறைந்தசெலவில் மண் இல்லாமல் ஆடு, மாடுகளுக்குதீவனம் உற்பத்தி கலெக்டர் வீரராகவராவ் தகவல்
வறட்சிகாலத்தில் குறைந்தசெலவில் மண் இல்லாமல் ஆடு, மாடுகளுக்கு தீவனம் உற்பத்தி
மதுரை,
கால்நடை மற்றும் வேளாண்மைத்துறையின் மூலம் மதுரை மாவட்டம் தட்டானூரை சேர்ந்த பொன்வைரவன் கோழி மற்றும் கால்நடைகளுக்கு மண்ணில்லாமல் குறைந்த செலவில் தீவனம் உற்பத்தி செய்து வருகிறார். அதனைகலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டார். அதைதொடர்ந்து அவர் நிருபர்களிடம்கூறியதாவது;–
கால்நடை மற்றும் வேளாண்மைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தின் மூலம் ஆடு, மாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்புக்காக தீவனங்களை வழங்கும் பொருட்டு மண்ணில்லாமல் குறைந்த செலவில் தீவனம் உற்பத்தி (ஹைட்ரோபோனிக்ஸ்) செய்யும் நவீன தொழில் நுட்பம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வெளிச்சம் இல்லாதஇடத்தில் பிளாஸ்டிக் டிரேக்களில் சோளம் மற்றும் தானிய பயிர்களை குறுகிய நாட்களில் வளர்த்து தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு தீவனங்களை வழங்கலாம். அதன் மூலம் வறட்சி காலத்தில் ஏற்படும் தீவனப்பற்றாக்குறையை தடுக்கலாம். இந்த தொழில்நுட்பம் விவசாயிகளுக்குகற்றுக்கொடுக்கப்பட்டு, தீவனம் வளர்ப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறது.
கால்நடைகள்மாவட்டத்தில் பசு மாடு மற்றும் கறவை மாடுகளின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 20ஆயிரத்து 510 ஆகும். 4லட்சத்து 81ஆயிரத்து 455 ஆடுகள்உள்ளன. ஏப்ரல், மே மற்றும் ஜுன் போன்ற வெப்பகாலங்களில் இதற்காக தேவைப்படும் தீவனங்களின் தேவை 59ஆயிரத்து538 டன் ஆகும். தற்பொழுது உள்ள தீவன இருப்பின் அளவு 28ஆயிரத்து 217 டன் ஆகும். 31 ஆயிரத்து 321 டன் தேவை. அதனை ஈடுசெய்யும் பொருட்டு, மானிய விலையில் ஒரு கால்நடைக்கு நாள் ஒன்றுக்கு 3 கிலோ வீதம் அதிகபட்சம் 5 கால்நடைகளுக்கு ஒரு வாரத்திற்கு 105 கிலோ வரை ஒரு விவசாயிக்கு ஒரு கிலோ வைக்கோல் ரூ.2 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
கால்நடை மற்றும் கோழிகளுக்கு வழங்குவதற்காக 500 ஏக்கர் பரப்பளவில் சோளபயிர் வளர்க்கப்பட்டு வருகிறது. விலையில்லா ஆடுகளின் தீவனங்களுக்காக அகத்தி விதைகள் வழங்கி செடிகள் வளர்த்து தீவனமாக வழங்கப்பட்டு வருகிறது. நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக மானியம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.
இணை இயக்குநர் (வேளாண்மை) ஸ்ரீதர், இணை இயக்குனர் (கால்நடை) பாலச்சந்திரன், வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் பழனி;ச்சாமி, மதுரை மேற்கு தாசில்தார் சிவபாலன் மற்றும் பலர் உடனிருந்தனர்.