குடியிருப்பு பகுதிக்கு மதுபான கடை இடமாற்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்


குடியிருப்பு பகுதிக்கு மதுபான கடை இடமாற்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 2 April 2017 4:45 AM IST (Updated: 2 April 2017 12:12 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதிக்கு மதுபான கடை இடமாற்றம்: முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

போடி,

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மதுபான கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து, போடி நகராட்சி பகுதியில் உள்ள 5 மதுபான கடைகள் மூடப்பட்டன. அதன்படி போடி பெரியாண்டவர் கோவில் பகுதியில் உள்ள 2 கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதில் ஒரு கடையை குப்பிநாயக்கன்பட்டிக்கும், தேவர் காலனிக்கும் இடையே உள்ள பகுதியில் மதுபான கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடம், தேவர் காலனிக்கு செல்லும் வழியில் இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும் என்று கருதி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் மதுபான கடையை நேற்று திறக்க இருப்பதாக தகவல் பரவியது.

இதனையடுத்து 50–க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு, அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் பங்கேற்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெங்கடாசலபதி மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அடுத்த கட்டமாக டாஸ்மாக் மேலாளரை சந்தித்து மனு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story