ஆதிவாசி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு
நெடுகல்கம்பை அருகே ஆதிவாசி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு
கொலக்கம்பை,
கொலக்கம்பை அருகே உள்ள நெடுகல்கம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள ஆதிவாசி கிராமங்களில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாவோயிஸ்டுகள் புகுந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார், வனத்துறையினர், அதிரடிப்படையினர் ஆதிவாசி கிராமங்கள் மற்றும் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மாவோயிஸ்டுகள் தடுப்பு பிரிவு சப்– இன்ஸ்பெண்டர் அய்தர்அலி தலைமையில், சப்–இன்ஸ்பெக்டர் முரளி, சிறப்பு அதிரப்படை போலீசார் ஆதிவாசி கிராமமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர்கள் ஆதிவாசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story