ஆண்டாள் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருடந்தோறும் பங்குனிமாதம் உத்திரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த வருடத்துக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது.
இதனை முன்னிட்டு நேற்று காலை 4 ரத வீதி வழியாக கொடி எடுத்து வரப்பட்டு கோவிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டதோடு ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம் நடந்தது. அதன்பிறகு கோவிந்தாச்சாரி பட்டர் கொடியேற்றி வைத்தார். இதில் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி ராமராஜா, ஆண்டாள் சொக்கலிங்கம் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து 9-ந் தேதி வரை ஆண்டாள்-ரெங்கமன்னார் வீதி உலா நடைபெறுகிறது.
திருக்கல்யாணம்
முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் திருக்கல்யாணம் பங்குனி உத்திரமான 9-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு கீழ ரதவீதியில் சிறிய செப்புத்தேரில் ஆண்டாள்-ரெங்கமன்னார் பவனி நடக்கிறது. மாலை 4 மணிக்கு கன்னிகாதானம் நடைபெறுகிறது.
இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுகிறது.

Next Story