போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மீது மினி லாரியை ஏற்றி கொல்ல முயற்சி 2 பேர் கைது
கொல்லங்கோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மீது மினி லாரியை ஏற்றி கொல்ல முயன்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொல்லங்கோடு,
குமரி மாவட்டம் கொல்லங்கோடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் செல்லத்துரை, கிறிஸ்துதாஸ் ஆகியோர் சூழால் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நடைக்காவில் இருந்து சூழால் நோக்கி ஒரு மினி லாரி வேகமாக வந்தது. அதை நிறுத்துமாறு சப்–இன்ஸ்பெக்டர் முருகன் சைகை காட்டினார். ஆனால், அது நிற்காமல் வேகமாக சப்–இன்ஸ்பெக்டர் மீது மோதுவது போல் வந்தது.
உடனே, சப்–இன்ஸ்பெக்டர் முருகன் விலகிக்கொண்டார். இதனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
மினி லாரி பறிமுதல்
தொடர்ந்து, வேகமாக சென்ற மினி லாரியை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது, அதில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிய வந்தது. பின்னர் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் டிரைவர் தளச்சன்விளையை சேர்ந்த வில்சன் (வயது 34), கிளீனர் சீனுகுமார் (35) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 2 பேர் மீதும் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை மினி லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைதான கிளீனர் சீனுகுமார் அரசு போக்குவரத்து கழக ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story