பெருந்துறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பெருந்துறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 April 2017 9:30 PM GMT (Updated: 2017-04-03T00:08:53+05:30)

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெருந்துறை பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெருந்துறை,

புதுடெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கையை மத்திய, மாநில அரசு நிறைவேற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெருந்துறை பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பெருந்துறை தாலுகா செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் 18 பேர் கலந்து கொண்டனர்.


Next Story