கோலார்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து கார்–மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி


கோலார்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து கார்–மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 2 April 2017 9:00 PM GMT (Updated: 2017-04-03T00:18:52+05:30)

கோலார்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

கோலார் தங்கவயல்,

கோலார்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

கார்–மோட்டார் சைக்கிள் மோதல்

கோலார்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மெட்டுபந்தே கிராமம் அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் ஓட்ட, பின்னே ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார். அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த ஒரு கார், எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மேலும் மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளிக்கொண்டு கார் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்த வாலிபரும், இளம்பெண்ணும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கார் டிரைவரும் படுகாயம் அடைந்தார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து அறிந்த கோலார் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் காயம் அடைந்த கார் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான அந்த வாலிபர் மற்றும் இளம்பெண்ணின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியானது மோகன் குமார்(வயது 25), கவுதமி(22) என்று தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்?, எங்கிருந்து வந்தார்கள்? போன்ற எந்த விவரங்களும் தெரியவில்லை. இதுகுறித்து கோலார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story