சேலத்தில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்ட பா.ம.க.வினர்


சேலத்தில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்ட பா.ம.க.வினர்
x
தினத்தந்தி 3 April 2017 4:15 AM IST (Updated: 3 April 2017 12:22 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே ஒரு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.

சேலம்,

சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே ஒரு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மாநில நெடுஞ்சாலையில் உள்ள இந்த டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி நேற்று பா.ம.க.வின் மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்.ராசரத்தினம் தலைமையில் கட்சியினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி இந்த டாஸ்மாக் மதுக்கடையை உடனே மூட வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பப்பட்டன. இதையடுத்து அங்கு வந்த அன்னதானப்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

1 More update

Next Story