பொன்னேரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்


பொன்னேரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 3 April 2017 4:15 AM IST (Updated: 3 April 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் டாஸ்டாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்

பொன்னேரி,

பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் தனியார் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை பொன்னேரி–பெரும்பேடு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளதால் இந்த பகுதி மக்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நேற்று முன்தினம் நெடுஞ்சாலை ஓரம் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இதனால் மது பிரியர்கள் அதிக அளவில் லட்சுமிபுரம் டாஸ்மாக் கடை முன்பு நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கினர். இது அந்த பகுதி மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடையை திறக்காமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை திறக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story