திண்டுக்கல்லில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
மாணவர் இந்தியா மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்,
திண்டுக்கல் பேகம்பூரில் மாணவர் இந்தியா மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாணவர் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் முகமது மிர்தவுஸ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் தினேஷ் சக்திபாலன் முன்னிலை வகித்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளர் அன்சாரி, மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, பொருளாளர் மரைக்காயர்சேட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். விவசாய கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் பலரும் கலந்துகொண்டனர்.
Next Story