புதுச்சேரி முதல்–அமைச்சர் வீட்டருகே கோவிலில் உண்டியல் உடைப்பு


புதுச்சேரி முதல்–அமைச்சர் வீட்டருகே கோவிலில் உண்டியல் உடைப்பு
x
தினத்தந்தி 3 April 2017 3:30 AM IST (Updated: 3 April 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் முதல்–அமைச்சர் வீட்டருகே கோவிலில் உண்டியல் உடைப்பு

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமியின் வீடு எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ளது. இதே தெருவில் முதல்–அமைச்சர் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலை நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து பூட்டி சென்றுள்ளனர். நேற்று காலை கோவிலை திறந்து பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து பணத்தை மர்ம மனிதன் யாரோ திருடி சென்றுள்ளான்.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் ஒதியஞ்சாலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்திலிருந்து கைரேகைகளும் எடுக்கப்பட்டுள்ளன. உண்டியல் உடைக்கப்பட்ட கோவிலில் கண்காணிப்பு கேமராக்களும் உள்ளன. அதில் பதிவாகியுள்ள கைரேகைகளையும் போலீசார் எடுத்து பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒத்துப்போகிறதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமிராவில் வடமாநில இளைஞரின் போன்ற ஒருவரின் தோற்றம் பதிவாகியுள்ளது. அவர் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story