கும்பகோணம் அருகே சர்வமானிய வாய்க்காலில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு
கும்பகோணம் அருகே கொட்டையூரில் உள்ள சர்வமானிய வாய்க்காலில் ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலை நேற்று ஆய்வு செய்தார்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளங்கள், பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை தூர்வார ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப் படவில்லை என கூறி கும்பகோணத்தை சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலையை நியமித்து கும்பகோணத்தில் உள்ள பாசன வாய்க்கால்கள் மற்றும் குளங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. மேலும் ஆய்வு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலை கும்பகோணத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
சர்வமானிய வாய்க்கால்
இந்த நிலையில் நேற்று கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் காவிரி ஆற்றில் இருந்து பிரியும் சர்வமானிய வாய்க்காலை ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலை ஆய்வு செய்தார். அப்போது யானை ராஜேந்திரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story