டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 3 April 2017 4:30 AM IST (Updated: 3 April 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த அண்ணாப்பேட்டை கடைத்தெருவில் டாஸ்மாக்கடை இயங்கிவருகிறது. இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். போராட்டத்தில், இந்த டாஸ்மாக்கடை அருகில் பள்ளி, வாரசந்தை ஆகியவை இயங்கி வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே டாஸ்மாக்கடையை அகற்ற வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விரைவில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story