4–வது நாளாக போராட்டம் லாரிகள் வேலை நிறுத்தத்தால் தொழிலாளர்கள் பாதிப்பு


4–வது நாளாக போராட்டம் லாரிகள் வேலை நிறுத்தத்தால் தொழிலாளர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 2 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-03T02:20:27+05:30)

4–வது நாளாக போராட்டம் லாரிகள் வேலை நிறுத்தத்தால் தொழிலாளர்கள் பாதிப்பு காய்கறிகள் விலை உயர்வு

நெல்லை,


வாகனங்களுக்கான காப்பீட்டு தொகை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 30–ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 4–வது நாளாகவும் நீடித்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை.

இதனால் நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் குறைந்து காய்கறி மூட்டைகள் தேங்கின. காய்கறிகள் வரத்தும் குறைந்ததால் காய்கறிகள் விலை உயர்த்தி விற்கப்பட்டன. இதே போல் லாரிகளில் சரக்கு ஏற்றி, இறக்கும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.


Next Story