பேஸ்புக்கில் சிறுமிக்கு ஆபாச தொல்லை: கடற்படை அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு
பேஸ்புக்கில் சிறுமிக்கு ஆபாச தொல்லை கொடுத்து வந்த கடற்படை அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மும்பை,
பேஸ்புக்கில் சிறுமிக்கு ஆபாச தொல்லை கொடுத்து வந்த கடற்படை அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பேஸ்புக்கில் அறிமுகம்ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியின் 16 வயது மகளுக்கு கடந்த 2010–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேஸ்புக்கில் மற்றொரு கடற்படை அதிகாரியான திலிப்குமார்(வயது27) என்பவர் அறிமுகமானார். சிறுமி, திலிப்குமாரிடம் சகஜமாக பேசினார். இந்தநிலையில் சிறுமியிடம், திலிப்குமார் ஆபாசமாக பேசத் தொடங்கினார். இதனால் சிறுமி அவருடனான நட்பை துண்டித்து கொண்டார்.
இதனால் ஆத்திமடைந்த திலிப்குமார், சிறுமிக்கு பேஸ்புக்கில் ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்தார். இதுபற்றி சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்தாள்.
2 ஆண்டு ஜெயில்இதனால் சிறுமியின் தந்தை சம்பவம் குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பேஸ்புக்கில் சிறுமிக்கு ஆபாச தொல்லை கொடுத்து வந்த திலிப்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மோகா சுவர்ணா ராஜூ, கடற்படை அதிகாரி திலிப்குமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். திலிப் குமார் தற்போது கொலபாவில் கடற்படை அதிகாரியாக இருந்து வருகிறார்.