பங்குனி உத்திர திருவிழாவையொட்டி குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன்


பங்குனி உத்திர திருவிழாவையொட்டி  குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 9 April 2017 11:15 PM GMT (Updated: 9 April 2017 4:27 PM GMT)

காரைக்குடியை அடுத்த குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா

காரைக்குடி,

காரைக்குடியை அடுத்த குன்றக்குடியில் பிரசித்தி பெற்ற சண்முகநாத பெருமான் கோவில் உள்ளது. திருவண்ணாமலை ஆதீன கோவிலான இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 31–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து விழாவில் ஒவ்வொரு நாளும் சாமி சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில் குன்றக்குடி மலையை வலம் வந்து தேர் மீண்டும் நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பறவை காவடி

இந்தநிலையில் நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி தீர்த்த விழாவும், மயிலாடும் பாறைக்கு சாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடி, அக்னிக்காவடி, பறவைக்காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வளவன், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story