பங்குனி உத்திர திருவிழா: குயவன்குடி சுப்பையா கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்


பங்குனி உத்திர திருவிழா: குயவன்குடி சுப்பையா கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்
x
தினத்தந்தி 9 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-09T22:01:26+05:30)

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் குயவன்குடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பையா கோவிலில் பங்குனி உத்திர விழா

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் குயவன்குடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பையா கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த மாதம் 31–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் கலையரங்கத்தில் தளஞ்சியம் சாமிகள், தெற்கூர் பெரியசாமி சாமிகள், ஆறுமுகனேரி எம்.எஸ்.பிரஷா, தெரிசை அய்யப்பன் ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று பக்தர்கள் பால்குடம், இளநீர் காவடி, அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைதொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். அதனைதொடர்ந்து பூஜகர் அம்பிகைவேல் சாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் குயவன்குடி கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story