வாழப்பாடி அருகே டேங்கர் லாரியில் கியாஸ் கசிந்ததால் பரபரப்பு 4½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


வாழப்பாடி அருகே டேங்கர் லாரியில் கியாஸ் கசிந்ததால் பரபரப்பு 4½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 April 2017 11:15 PM GMT (Updated: 2017-04-09T22:21:12+05:30)

வாழப்பாடி அருகே டேங்கர் லாரியில் கியாஸ் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழப்பாடி,

கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி 4½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

லாரியில் கியாஸ் கசிவு

இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷனுக்கு சொந்தமான டேங்கர் லாரி ஒன்று சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 18 டன் கியாசை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி சுங்கசாவடியில் டேங்கர் லாரி நின்றபோது திடீரென பழுதானது. இதனால் அந்த லாரியை சுங்கசாவடி ஊழியர்கள், வாகன மீட்பு குழுவினர் சாலையோரம் நகர்த்தினர்.

அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் மீட்டர் கேஜ் பகுதியில் விரிசல் ஏற்பட்டு,

கியாஸ்

அதிக சத்தத்துடன் லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர், வாழப்பாடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு படையினர்

சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி நின்ற இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்னதாக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அந்த வாகனங்கள் பேளூர், நீர்முள்ளிக்குட்டை, அயோத்தியாப்பட்டணம் வழியாக திருப்பி விடப்பட்டன.

கியாஸ்

கசிந்து கொண்டிருந்ததால் யாரையும் அருகில் நெருங்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து டேங்கர் லாரியில்

கியாஸ்

கசிவை நிறுத்தும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். டேங்கர் லாரியில் இருந்து

கியாஸ்

வெளியாகி வரும் சூழலில், அங்கு ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதால் சுங்கசாவடி ஊழியர்களை போலீசார் வெளியேற்றினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு

கியாஸ் கசிவு ஏற்படும் இடத்தை அடைப்பதற்காக டேங்கர் லாரி வடிவமைப்பு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து மாலை 4.30 மணியளவில்

கியாஸ்

கசிவு சரிசெய்யப்பட்டது. பின்னர் லாரி பெருந்துறைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் சேலத்தில் இருந்து வாழப்பாடி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சென்னை பகுதிக்கு செல்லும் வாகனங்கள் சிரமத்திற்கு உள்ளாகின. இதனால் சுமார் 4½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story