நாமக்கல் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்


நாமக்கல் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்
x
தினத்தந்தி 9 April 2017 10:30 PM GMT (Updated: 9 April 2017 5:34 PM GMT)

தமிழகம் முழுவதும் நேற்று பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் நேற்று பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள காந்திநகர் பாலதண்டாயுதபாணி கோவிலில் மகா சங்கல்பம் நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது.

பின்னர் கணபதி ஹோமம் மற்றும் சுப்பிரமணியர் ஹோமம் நடத்தப்பட்டன. தொடர்ந்து 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாலையில் சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாலதண்டாயுதபாணி சாமி வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


Next Story